ஆலயத்ததின் அமைவிடம்

சிவபூமி என திருமூலரால் சிறப்பிக்கப்பட்ட இலங்காபுரியில், அக்கரைப்பற்று என்ற இடம் உள்ளது. அது தலைநகர் கொழும்பிலிருந்து கிழக்கே சுமார் முந்நூற்றைம்பது (350km) கிலோமீற்றர் தொலைவில் வங்கக்கடலின் அருகில் அமைற்துள்ளது. மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்புக்குத் தெற்கே சுமார் அறுபத்தைந்து (65km) கிலோமீற்றர் தொலைவில், கரையோரப் பிரதேசமாக இந்நிலப்பகுதி அமைந்துள்ளது.

அக்கரைப்பற்று என்பதன்விசித்திரம் யாதெனின் எந்தப்பபுதியில் இருப்பவர்களுக்கும் இந்தப்பகுதி அக்கரையிலேயே அமைந்திருப்பதுதான். அக்கரை என்பது அந்தப்பக்கம் என்றும் பற்று என்பது சிறிய நிலப் பிரதேசங்களை குறிப்பதற்கு புராதன இலங்கையில் கையாளப்பட்டுவந்த ஓர் சொல்லாகும். (உ+ம்) கேறளைப்பற்று, மண்முனைப்பற்று, பாணமைப்பற்று முதலியன.

அக்கரைப்பற்றின் கிழக்குத் திசையி்ல் வங்காள விரிகுடாகடல் அமைந்துள்ளது. மேற்கில் கடல் நீரேரி என அழைக்கப்படும் களப்பு, தெற்கில் முகத்துவாரம் - சின்ன முகத்துவாரம், பெரிய முகத்துவாரம். வடக்கில் களியோடை ஆறு பட்டியடிப்பிட்டி என்னும் நீர்பிரதேசங்கள் வேறுவிதமாகக் கூறினால் அம்பாறை வளியாக நோக்கினால் பட்டியடிப் பிட்டி பாலத்தை கடந்து வர வேண்டும். கல்முனை வழியாக நோக்கினால் களியோடை மீனோடைக்கட்டு பாலங்களைக் கடந்து வரவேண்டும். பொத்துவில், திருக்கோவில், தம்பிலுவிலூடாக நோக்கினால் பெரிய முகத்துவாரம் சின்னமுகத்துவாரங்களைக் கடந்து வரவேண்டும். சாகாம வீதியினூடாக நோக்கினால் பனங்காட்டு பாலத்தைக்கடந்து வரவேண்டும். இவ்வாறு எந்தத் திசையிலிருந்து நோக்கினாலும் இந்த இடம் அக்கரையிலேயே அமைந்திருக்கிறது.

இதுதான் அக்கரைப்பற்றின் விசித்திரம். அழகிய தீவுபோல் காட்சி தரும் இவ்வூர் பண்டைக்காலத்தில் கருங்கொடித்தீவு என்றே அழைக்கப்பட்டது. இன்று அக்கரைப்பற்று ஒர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் மாநகரசபை என்ற நிலைக்கு உயர்ந்து நகரப்பாங்கான சூழலாகவும் மாறிவருகின்றது. நகரத்தின் மத்தியிலிருந்து வடமேற்கில் சுமார் ஒரு கி்லொமீற்றர் தொலைவிலேயே வாச்சிக்குடா எனும் சிறிய நிலப்பகுதி அமைந்துள்ளது.

 

   
Copyright (c) 2014 All rights reserved. janarthanasarma. +094755905265

 

Free Web Hosting