குருவே துணை.

குரு மந்திரம்...

ஓம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ முருகேஸ்வராய வித்மஹே

சர்வ பூர்த்தீகராய தீமஹி

தன்னோ ஞான குரு ப்ரசோதயாத் .

 
டாக்டர் ஆர்.கே. முருகேசு சுவாமிகளின் சமாதி நிலைக்கு பின்பும் சூட்சுமமாக வழிநடத்தப்படுகின்ற ஆலயங்களில் அக்கரைப்பற்று வாச்சிக்குடாவில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயமும் ஒன்று. சுவாமிகளின் சூட்சும நிலையில் இச்சிருஷ்டிப்பை எண்ணி வியப்படைகின்றோம்.
 

ஆலய குரு பீடம்.

 

சமர்ப்பணம்.

தெய்வீகத் தொண்டாற்ற இம்மண்ணுலக மக்களுக்கு பிள்ளையாக ஈன்ற என் மாதா பிதாவுக்கு முதல் வணக்கம். என்றும் ஆன்மீகத் துறையிலே என்னை ஆட்கொண்டு வழிநடத்தும் ஸத்குருவின் திருவடிகளுக்கு பல கோடி வணக்கங்கள். என்றும் நாளாந்த வழிபாட்டு முறையிலே தாயே நமஹ! தந்தையே நமஹ! சற்குருவே நமஹ! என்று மாதா, பிதா, குரு என்றும் மும்மணிகளுக்கு முதல் வண்க்கம் கூறி வழிபாட்டு முறையை ஆரம்பிக்க வேண்டும் என்ற உயரிய உண்மையை இவ் வுலக மக்களுக்கு போதித்து நுவரெலியாவில் ஜீவசமாதி யடைந்த உலக ஆன்மீக சபைின் தலைவர் காயத்திரி சித்தர் டாக்டர் ஆர.கே.முருகேசு சுவாமிகளுக்கு சமர்ப்பணம்.
 

சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு.

1933-10-26 இல் பூவுலகில் அவதரித்தார்.
பாரத பூமி பழம் பெரும் பூமி, இந்து சமய தத்துவசிந்தனைகளை அகிலத்திற்கு பறை சாற்றிய புண்ணிய பூமி அங்கு தான் கடவுளர்களும் மன்னர்களாக வந்து ஆட்சி செய்த வரலாறும் ஞானிகளும், சித்தர்களும், மகரிஷிகளும், நாயன்மார்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், பேரறிஞர்களும் தோன்றி அரும் பெரும் சாதனைகளையும் அற்புதங்களையும் புரிந்துள்ளனர். அத்தகையதோர் ஆன்மீகக்கரு இலங்கையில் அவதரித்தது.
ஆம் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் தாய் தந்தையர் தென்னிந்தியாவில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார் கோவில் கிராமத்தைச் சேர்ந்த இராமன் காளிமுத்து சந்தனம்மா தம்பதியராவர். இவர்கள் தொழிலின் நிமித்தம் இற்றைக்க சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் கண்டி மாநகரத்தில் வசித்து வந்தனர். அவ்வேளையில் 1933 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இராமன் காளிமுத்து சந்தனம்மா தம்பதியினருக்கு சுவாமிகள் மகனாக அவதரித்தார்.
சுவாமிகளின் குடும்ப நிலை.
சுவாமிகள் சாதாரண எளிமையான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆறு சகோதரர்களும் , இரண்டு சகோதரிகளும் உடன்பிறப்புக்களாயினும் மூத்தவர் சுவாமிகளே. கும்பப் பொறுப்பைத் தாங்க வேண்டிய நிலை இள வயதிலேயே சுவாமிகளுக்கு ஏற்பட்டது. தாய் தந்தை சொற் கேட்டு நடப்பவராகவும், சகோதர சகோதரிகளிடத்து பாசம் நிறைந்தவராகவும் சந்தர்ப்ப சூழ்நிலைக் கேற்ப தம் ஆசா பாசங்களைச் சுருக்கி தனக்கென வாழாது குடும்பத்திற்காக வாழும் ஒரு சிறந்த பிள்ளையாக பெற்றோராலும் மற்றோராலும் இனங்காணப்பட்டார். குடும்பச்சுமையைத் தாங்க வேண்டியவராக இருந்ததால் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவராக இருந்தார்.
சுவாமிகளின் கல்வி நிலை
“கருவிலே திரவுடையார்” என்பது போல் சுவாமிகள் கல்வியில் மிகப் பிரகாசித்தார. கல்வி கற்கும் பராயத்தில் தனது 10 ஆவது வயதிலே கண்டியில் குண்டக சாலைக்க அருகில் உள்ள பள்ளேகல தோட்டத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது சந்நியாசி ஒருவரால் முதன் முறையாக ஆட்கொள்ளப்பட்டமை சுவாமிகளின் கல்விக் கண்களை அகலத் திறந்தன. அந்த முனிவர் சுவாமிகளி்ன் கைகளிலே “விநாயகர்கவசம்” என்ற சிறிய புத்தகத்தைக் கொடுத்து “இதை நீ தினமும் பாராயணம் செய் வாழ்க்கையில் பெரும் உயர்வடைவாய் ” என ஆசீர்வதித்தமை சுவாமிகளுக்கு கல்வி அறிவோடு ஞானத்தையும் ஊட்டியது. இருந்தும் குடும்பத்தின் கஷ்டநிலை காரணமாக தனது 14 வது வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திக்கொண்டார்.
சுவாமிகளின் உத்தியோகமும் பதவிகளும்.
ஆரம்பத்தில் குடும்பக் கஷ்டத்தை போக்குவதற்கு ஓர் உணவு விடுதியில் சிற்றுாளியராகப் பணி புரிந்தார். பின்னர் ஓர் அலுவலகப்பணியாளராகக் கடமையாற்றினார். சுவாமிகளுக்கிருந்த விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் கல்வித்திறனும் அவரை ஓர் ஆங்கிலக் கம்பனியின் உயர் அதிகாரியாக உயர்த்தியது. 1994இல் உலக ஆன்மீகப் பாராளுமன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுடில்லியிலுள்ள விஷ்வ உணாயன் ஷம்ஷாட் அலுவலகம் சுவாமிகளுக்கு உலக அபிவிருத்தித் துறையில் தத்துவம், விஞ்ஞானம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான டாக்டர் பட்டத்தினை வழங்கி கௌரவித்தது.
சுவாமிகளின் பன்மொழிப் புலமை.
சுவாமிகள் தமிழ் மொழியில் ஆழமான அறிவடையவர் என்பதை அவரது ஆன்மிகச் சொற் பொழிவுகளும் அவர் எழுதிய நூல்களும் புலப்படுத்தும், சிங்கள மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். தினமும் சுவாமிகளைத்தேடி சிங்கள மொழியில் சிறப்பாக உரையாடம் பொது அவர்களுடன் சிங்கள மொழியில் சிறப்பாக உரையாடும் போது அவர்களே வியப்படைவர். சில சமயங்களில் கூடுதலான் பக்தர்கள் திரண்டிருக்கும் போது தமிழ் மொழியில் வேறாகவும், சிங்கள மொழியில் வேறாகவும் ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தவார். காயத்திரி மந்திர மகிமை முதலிய புத்தகங்களை சிங்களத்திலும் வெளியிட்டுள்ளார். வெளிநாட்டவர் அமெரிக்கா, ஜெர்மன், தென்னாபிரிக்கா, மலேசியா, கனடா முதலான நாடுகளிலிருந்தும் வந்து சுவாமிகளைத் தரிசிக்கும் போது அவர்களிடம் ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக உரையாடவார். சுவாமிகள் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார். மலையாள மொழியில் இருந்த சங்கரரின் பஜகோவிந்தம் எனும் 31 பாடல்கள் கொண்ட கவிதைத் தொகுதியை தான் படித்து இன்புற்றதனை தமிழ் பக்கர்களும் அறிய வேண்டும் என்று அதனை தமிழில் மொழி பெயர்த்து ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம் என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். இவ்வாறு தமிழ், சிங்களம், ஆங்கிலம், மலையாளம் முதலிய மொழிகளிலே சுவாமி தேர்ச்சி பெற்றிருந்தார்.
சுவாமிகளின் நூற்பணிகள்.
தமிழ், ஆங்கிலம் , சிங்களம் ஆகிய மொழிகளில் பல் வேறு புத்தகங்களை சுவாமிகள் வெளியிட்டிருப்பது அவரது ஆழமான அறிவையும் சமய தத்துவ, விஞ்ஞானத் துறைகளிலே தனக்கிருந்த புலமையையும் உணர்த்தும். அவர் எழுதி வெளியிட்ட நூல்கள் வறுமாறு.

தமிழில் வெளியிடப்பட்டவை

ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டவை

01. ஸ்ரீகாயத்ரி மந்திர மகிமை
01. Spiritual Teaching of Swamai Murugesu
02. ஞானகுரு
02. The Grade Science and Power of Gayathri
03. மனித காந்தம்
03. Spiritual Tenets of Sri Gayathri Peetam
04. எளியமுறை யோகப்பயிற்சி
04. Veda Manthra
05. சகல தெய்வ உபாசனா சித்தி சாதனை
05. Science of Ciear Voyance
06. காயத்திரி உபாசன பத்ததி
06. Idol Worship
07. காயத்ரி இராமாயணம்
07. Human Magnetism
08. காயத்ரி கீதை
08. Cosmo Mystic Meditation
09. காயத்ரி மூலம் குண்டலினி விழிப்பு
 
10. மனித உடலில் தெய்வ ஞானம்
 
11. காயத்ரி சகஸ்ர நாமம்
 
12. அருவமும் உருவமும்
 
13. சூஷ்ம திருஸ்டி விஞ்ஞானம்
 
14. பஜ கோவிந்தம்
 
15. ஏகாக்ர விஞ்ஞானம்
 
16. ஸ்ரீ லலிதா பஞ்ச ரத்னம்
 
17. யாக விஞ்ஞானம்
 
18. காயத்ரி ஸ்மிருதி, கீதை, உபநிஷத்
 
19. தியானம் என்றால் என்ன
 
20. மானச யோகம்
 
21. ஷட்பதி
 
22. ஸ்ரீலங்காதீஸ்வரர் ஆலயகும்பாபிஷேக சிறப்புமலர் (நுவரெலியா 1996)
 
23. சப்தரிஷி மண்டல கும்பாபிஷேக சிறப்புமலர் (மட்டுநகர் 2004)
 
சுவாமிகளின் ஆலயப்பணிகள்.
சுவாமிகளால் முதன் முதலில் அமைக்கப்பட்ட ஆலயம் நுவரெலியா லேடி மக்கலம் வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ லங்காதீஸ்வரர் ஆலயமாகும். ஸ்ரீ சிவபால யோகி மகராஜ் பன்னிரெண்டு வருடங்கள் கடும் தவம் செய்து சிவன் அருளால் இந்தியாவின் நருமதை நதியில் இருந்து 1978 ஆம் ஆண்டு கண்டெடுத்த உயிர் இலிங்கம் இக்கோயிலில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. இதுவே காயத்ரி சர்வதேச அமையத்தின் தலைமைப்பீடமும் ஆகும். பரிவார தெய்வங்களுக்கும் கோவில்கள் அமைந்துள்ளன. இதற்கருகில் மிகப்பிரமாண்டமான தியான மண்டபமும் அமைந்துள்ளது.
ஆடுத்ததாக அம்பாறை மாவட்டத்ததின் தெற்கே தம்பிலுவில் எனும் அழகிய கிராமத்தில் “ஸ்ரீ காயத்திரி தபோவனம்” எனும் மிகப்பிரமாண்டமான வளாகத்தில் காயத்திரி மூலவிக்கிரகத்துடன் சிவலிங்கம், மகாமேருயந்திரம் அமையப்பெற்ற மூலஸ்தானம் மற்றும் பிள்ளையார், முருகன், விஷ்னு ஆஞ்சநேயர், அகஸ்த்தியர், விஸ்வாமித்திரர் திருவுருவங்களும் அமையப்பெற்ற ஆலயம் அமைந்துள்ளது.
மட்டக்களப்பு கல்லடி காயத்திரி கலாசார மண்டபம், மட்டக்களப்பு நாவலடி புதுமுகத்துவாரத்தில் அமைந்திருக்கும் சப்தரிஷி வளாகத்தில் சப்தரிஷிகளுக்கு தனியான, உலகில் வேறு எங்குமே அமையப்பெறாத எழுகோண வடிவிலான் ஆலயமும் மகாமேருயத்திரம் கருப்பக்கிரகத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்ட தனியான மகா மேரு ஆலயமும் மகா விஷ்னு ஆலயமும் அமைந்துள்ளது. இவை யாவும் சுவாமிகளின் அயராத முயற்சியால் அமைக்கப்பட்டது.
மேலும் திருகோணமலையில் கன்னியாய் என்னும் இடத்தில் ஆத்ம யோக ஞான சபை வவுனியா, கொழும்பு இவ்விடங்களில் இன்றும் காயத்திரி யாக பூசைகளும் வஜனைகளும் நடைபெற்றுகின்றன. வெளி நாடுகளில் தென்னாபிரிக்கா, ஜேர்மன், மலேசியா, இந்தியா, அமேரிக்கா, கனடா, சுவிஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தியான மண்டபங்கள் அமையப் பெற்றுள்ளன.
சுவாமிகளின் சமயப்பணியும் ஆன்மீகப்பணியும்.
சமயம், ஆன்மிகம் என்பன வெவ்வேறு பொருளுடையன. (Religion, Spirituality) சமயம் என்றால் வழி, பாதை, நெறி, மார்க்கம் என்று பொருள்படும், வாழ்க்கைக்கு வழி காட்டும் மார்க்கமே சமயம். ஒவ்வொருவரும் தெய்வ நம்பிக்கையின் பால் சார்ந்து நின்று அன்பு, அறம், உண்மை, நீதி, சாந்தம், அழகு, நன்மை முதலிய நற்பண்புகளை அல்லது தெய்வீகப்பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்வதற்கு சமயம் வழிகாட்டுகின்றது. இதற்கு கோயில்களும், விரதங்களும், பண்டிகைகளும், பழக்கவழக்கங்களும் வழிகாட்டுகின்றன. இவை அனைத்திற்கும் சுமாமிகள் காயத்திரி வழிபாட்டின் மூலம் வழிகாட்டினார்.
ஆன்மிகம் (Spirituality) என்பது ஆன்மா தொடர்பானது. ஒவ்வொருவரதும் உடலிலிருந்தும் அவ்வுடலை இயக்கும் சக்தியே ஆன்மா ஆகும். ஆன்மா இல்லையென்றால் உடல் இயங்க முடியாது. இந்த ஆன்மாக்குத்தான் இறை உணர்வை அனுபவிக்கின்ற பேறுகிடைக்கின்றது. இறைவனோடு இரண்டறக்கலந்து பேரானந்தப்பேற்றை அனுபவிக்கும் வல்லமை ஆத்மாவுக்கே உள்ளது. இதற்கு மனதை தயார்படுத்துகின்ற வழியாகவே தியானம், தவம், ஜெபம் முதலிய வழிகள் உள்ளன. இந்த வழிகளையே சுவாமிகள் கூடுதலாகப் போதித்த வண்ணம் இருப்பார். சுவாமிகள் அடிக்கடி கூறுவார் “நான் என்னை நாடி வருபவர்களைப் பார்கவில்லை அவர்களது ஆத்மாவைப் பார்கிறேன்” என்பார் சுவாமிகளின் பக்தர்களில் சிலர் ஆன்மீகத்தில் முள்னேறி சுவாமிகளோடும் தெற்வத்தோடும் சூட்சும நிலையில் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையை அடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடக்கூடிய ஓர் உண்மை. இந்த முன்னேற்றத்திற்கான பணிகளே சுவாமிகள் சமயத்திற்கு ஆன்மீகத்திற்கும் அரும் பெரும் பணிகளை ஆற்றியுள்ளார்.
சுவாமிகளின் சமுதாயப்பணிகள்
சமுகத்திலுள்ள பல தரப்பட்ட மக்களையும் அவர்களது தேவைகளையும் உணர்ந்து செயலாற்றியவர் சுவாமிகள். வறியவர்களுக்கு உடை, உணவு, அன்பளிப்புப் பொருட்களை வழங்கிக்கொண்டே இருப்பார். பசித்தவர் பசி ஆற அன்னதானம் என்னும் மகா சேவையை ஆரம்பித்தார். சிறுவர் இல்லம், அனாதைஇல்லம், முதியோர் இல்லம் என்பவற்றிற்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வார். தனது பக்தர்களுக்க உடைகளை வழங்கி அழகு பார்த்து மகிழ்வார். கோவில்களுடன் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கான மடங்களையும், சிறுவர் பாடசாலைகளையும் அமைத்துள்ளார். நோயாளர்களைக் குணப்படுத்தும் வைத்திய சாலையும் அமைத்தார் இந்தியாவிலிருந்து பெறுவதற்கரிய மருந்துக்களைக் கொண்டு வந்து பல நோயாளர்களைக் குணப்படுத்தியுள்ளார். அரசியல் வாதிகள் முதல் சாதாரண ஏழைமக்கள் வரை அவரது சமுதாயப்பணி சென்றடைந்தன.
சுவாமிகளின் அற்புதங்கள்.
  • சமயத்தின் பெயரால் இடம்பெறும் மூடநம்பிக்கைகளுக்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்களைக் கொடுத்த பெருமை சுவாமிகளையே சாரும் அவரது நூல்கள் அத்தனையும் இதற்குச் சான்று
  • இந்து சமயம் அறுவகைச் சமய நெறிகளையே இதுவரை கண்டிருந்தது. ஆனால் இந்துசமயத்தில் காயத்ரி வழிபாடு என்னும் ஓர் புதிய வழிபாட்டு மரபும், புனித மார்க்கமும் தேன்றி வளர்வதற்கு சுவாமிகளே காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார்.
  • தெய்வத்தோடும் மஹரிஷிக்ளோடும் தொடர்பு கொள்ளத் கூடியவராக இருந்ததுடன் தான் மறுமை உலகிற்குச் சென்று வந்த உண்மைகளையும் நெருங்கிய பக்தர்களுடன் அளவளாவியிருக்கிறார். ஊமைகளைப் பேச வைத்தது முதல் தீராத நோய்களையும் குணப்படுத்தியுள்ளார். பூசை முதலிய கருமங்களில் பொருட்கள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் தனது சக்தியால் அவற்றைப் பெற்றிருக்கின்றார்.
  • மஹரிசிகளின் சமாதிகளுக்குச் சென்று தவம் செய்து சூட்சுமமாக இருக்கும் அவர்களிடம் இருந்து அரும் பெரும் பொக்கிசங்களைப் பெற்றிருக்கிறார். வான்மீகி உயிர் மூலிகைகள் அவர்கள் வழிபட்ட நவபாஷாண லிங்கம் மந்திரக் கோல் அட்சய பாத்திரம் பாதாள மலர், தெய்வவிக்கிரகங்கள் என்பவற்றைப் பெற்றிருக்கின்றார்.
  • கொம்புத் தேங்காய் என்னும் தெய்வாம்சம் பொருந்திய அற்புதத்தேங்காய் (தம்பிலுவில் காயத்ரி தபோவனத்திலும் உள்ளது) மற்றும் 150 இற்கும் மேற்பட்ட சிறிய பெரிய அளவிலான உயிர் இலிங்கங்கள் கிடைக்கப் பெற்றமை.
  • அகஸ்தியமா மஹரிஷியால் ஆட்கொள்ளப்பட்டவர். சீதாபிராட்டியிடம் உணவு உட்கொண்டமை. கண்ணபரமாத்மாவின் சக்தியாம். ராதையிடம் சுவாமிகள் ஆசீர்வாதம் பெற்றமை.
  • தர்ம கர்த்தா சபை இல்லாமல் ஆலயங்கள் இயங்குவது எங்குமே இல்லை ஆனால் சுவாமிகளின் ஆலயங்கள் எந்த ஒரு தலைவரும், காரியாதரிசிகளும் இல்லாமல் இயங்குகின்றன. சுவாமிகளின் வேண்டுதலால் மகரிஷிகளின் அருளால் ஆலயங்கள் இயங்குகின்றமை மிக முக்கியமான அற்புதம்.
  • காயத்ரி சித்தர் பலசுவாமிகளிடமும், முனிவர்களிடமும் சென்று பல ஞான உபதேசங்களைக் கற்றுக் கொண்டவர். இவ்வாறு ஞான உபதேசம் பெற சுவாமிகள் ஞானானந்த சுவாமிகளிடம் சென்றார் இவர் சிரஞ்சீவியாக 400 வருடங்கள் இப் பூவுலகில் வாழ்ந்துள்ளார் அத்தகைய மகானிடம் காயத்ரிசித்தர் 4 வருடங்கள் சீடராக இருந்து ஞான உபதேசம் பெற்றார். ஞானானந்த சுவாமிகள் காயத்ரிசித்தரின் ஞான நிலையை அநிந்து தன்னுடைய பாதரட்சைகளை காயத்திரி சித்தர் 14 வருடங்கள் யாருக்கும் தெரியாமல் பூயித்துவந்தார். பின் காயத்திரி சித்தல் ராம்ஜி சுவாமிகளிடம் இந்த பாதரட்சைகளைக் கொடுத்து தனக்கு பாதபூயை செய்யுமாறு கூற ராம்ஜி சுவாமிகளும் நுவரெலியா காயத்ரி பீடத்தில் வைத்து பக்த அடியார்கள் முன்னிலையில் பாதரட்சைகளுக்கு அபிசேகம் செய்து பூயித்தார்.
முருகேசு சுவாமிகளுக்கும் ராம்ஜி சுவாமிகளுக்கும் இடையிலான தொடர்பு.
ராம்ஜி சுவாமிகள் ஞான போதசபா ஆச்சிரமத்தில் பூசைகள் செய்து கொண்டிருந்த காலத்தில் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் பக்தரும் ராம்ஜி சுவாமிகளின் நன்பருமான திரு.ஜோர்ஐ் என்பவர் மூலமாக ராம்ஜி சுவாமிகளுக்கும் முருயகெசு சுவாமிகளுக்கும் இடையே தொடர்புகள் ஏற்படத் தொடங்கின. அப்போது முருகேசு சுவாமிகள் மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்தார். திரு.ஜோஐ் அவர்கள் காயத்திரி சித்தரின் சுகமின்மையைக் கண்டு கலங்கி ஏதாவது உதவி செய்துவிட வேண்டும் என உறுதி பூண்டு ராம்ஜி சுவாமிகளை நாடினார்
நண்பனின் அன்பு வேண்டுகொள்ளுக்கிணங்கி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து காயத்திரி சித்தரின் நோய் குண மாக பிரார்த்தித்தார். ராம்ஜி சுவாமிகளின் பூசையின் பலன் கிடைக்கத்தொடங்கியது . ஆஞ்சநேயரின் அருளால் காயத்திரி சித்தர் சற்றுக் குணமடைந்து நடமாடத் தொடங்கினார் .
இந்த அற்புதத்தைக் கண்ட திரு.ஜோர்ஐ் அவர்கள் ராம்ஜி சுவாமிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் இலங்கைக்க வருமாறும் வேண்டிக் கொண்டார். இவரின் அன்பு வேண்டுகோளுக்கேற்ப ராம்ஜி சுவாமிகள் இலங்கைக்கு வருகை தந்தார்.
இலங்கையில் காயத்திரி சித்தருடன் சுமார் இருபது நாட்கள் தங்கியிருந்து பல ஆன்மீக உண்மைகளைக் கற்றுக் கொண்டார். மீண்டும் மலேசியா திரும்பி ஞானபோதசபா ஆச்சிரமத்திலே தொடர்ந்தும் சேவைகளைச் செய்து வந்தார்.
Copyright (c) 2014 All rights reserved. janarthanasarma. +094755905265

 

Free Web Hosting