முகப்பு
தேவஸ்தானம்
மூலவர் சன்னிதி
பரிபார சன்னிதி
தலவிருட்சம்
வரலாறு
அமைவிடம்
தோற்றம்
வளர்ச்சி
அற்புதம்
 
மந்திரம்
காயத்திரி
மந்திரம்
ஞானகுரு
குரு மந்திரம்
குருபீடம்
தொடர்பு
Drop Down Menus in CSS
by Css3Menu.co
தோற்றம்
இற்றைக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பே இவ்வாலயம் தோற்றம் பெறுவதற்கான சகுனங்கள் அதாவது நன்னிமித்தங்கள் நிகழ்ந்துள்ளன. நல்லதம்பி கந்தசாமி எனனும் இவ்வூரைச்சேர்ந்த ஓர் அன்பர் ஆஞ்சநேயரை தன் இஸ்டதெய்வமாக வளிபடுபவர். தனக்குச் சொந்தமான காணியில் ஆஞ்சநேயர் ஆலயம் அமைக்க வேண்டும் என விரும்பி, அந்தக் கிராமத்தில் உள்ள சில நண்பர்களுடனும் கலந்துரையாடி, ஒரு கியூப் கருங்கல்லை அவ்விடத்தில் வாங்கி போட்டிருந்தார். இது தொடர்பாக அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தார். ஆனால் கோயிலின் கட்டுமாணப்பணிகளை அவரால் ஆரம்பிக்க முடியவில்லை.
காலப்போக்கில் கருங்கல் குவிக்கப்பட்ட இடமும் அந்தக்காணியும் புல்பூண்டுகளாலும், முட்புதர்களாலும் மூடப்பட்டும் சில இடங்களில் நீர் நிரம்பி சேற்று நிலமாகவும் காட்சியளித்தது. இவ்விடத்தில் சுமார் 100 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த ஓர் மருத மரமும் அமைந்திருக்கின்றது. இதில் ஆஞ்சநேயர் வாசஞ் செய்வதையும் அவ்வப்போது பலர் அவதானித்திருக்கின்றனர். ஆனால் அது ஓர் பாழ்வளவு அவ்வளவுதான்.
இந்நிலையிலேதான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமியின் இறுதிக் காலத்திலும் மகாசமாதியின் பின்பும் மலேசியாவைச் சேர்ந்த ராம்ஜி சுவாமிகளின் (ஆஞ்சநேய சுவாமி) தொடர்பு இங்குள்ள பக்தர்களுக்கு ஏற்படுகின்றது. இவ்வூரைச் சேர்ந்தவரும் தம்பிலுவில் காயத்திரி தபோதனத்தை பரிபாலித்து வந்தவர்களில் ஒருவருமான ஜானகி அம்மா மற்றும் அதேபால் முருகேசு சுவாமியின்ஆசீர்வாதத்துடன் தம்பிலுவில் காயத்திரி தவோவனத்தை நிருவகித்து வந்தவரும், அங்கு பூசை யாகங்களை செய்தவருமான கந்தசாமி (அங்கிள்) அவர்கள் குறிப்பிடக்கூடியவர்கள். இவர்கள் முருகேசு சுவாமியிடத்து அசையாத பக்தி உடையவர்கள். இவர்கள் மூலம் வாச்சிக்குடாவில் ஒர் பக்தர்கூட்டமே உருவானது. முருகேசு சுவாமிகளுடைய ஆசிர்வாதமும், ராம்ஜி சுவாமிகளுடைய ஆசிர்வாதமும் இவர்களுடைய பக்திக்கு உரம் ஊட்டியது.
ராம்ஜி சுவாமிகள் முருகேசு சுவாமிகளுடன் சூட்சுமமாக தொடர்பு கொள்ளக் கூடியவர். ஆஞ்சநேயரோடு நேரடியாக பேசக்கூடிய வல்லமை படைத்தவர். சுவாமி அவர்கள் கடந்த 2008ம் ஆண்டில் இந்தியாவிலே சித்தேஸ்வரானந்தா சுவாமிகளிடம் குருஜி பட்டம் பெற்றதுடன் 48 நாள் மண்டலாபிசேக பூசையும் செய்து வந்தார். அவ்வேளையில் ஆஞ்சநேயர் நேரடியாக சுவாமிகளிடத்தில் தரிசனமாகி. தான் வாச்சிக்குடாவில் இருப்பதாகவும் அங்கு தனக்கு ஓர் ஆலயம் அமைத்துத் தரவேண்டும் என்று கேட்டதாகவும் ராம்ஜிசுவாமிகள் கூறினார். இந்தச்செய்தியை 2008.12.18ம் திகதி ராம்ஜி சுவாமிகள் கந்தசாமி என்பவரிடம் தொலைபேசியில் அறிவிக்க அவரும் அடுத்தநாள் டிசம்பர் 19ம் திகதி அவ்விடத்தைச் சென்று பார்வையிட்டார்.
அங்கு அவரால் நடந்து பார்வையிட முடியாத அளவிற்கு முட்களும் கற்களும் பள்ளமும் மேடும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது அவ்விடம் இருந்த நிலைமைகளை கந்தசாமி தொலைபேசிமூலம் சுவாமிகளுக்கு தெரியப்படுத்தினார்.
நிலத்தை தெரிவு செய்தமை
ராம்ஜி சுவாமிகள் அதனைக் கேட்டவுடன் தான் அவ்விடத்தை பார்ப்பதாகவும் கூறினார். அன்று 2008.12.19ம் திகதி இரவு 8.30 மணியளவில் மிகப்பெரிய அதிசயமும் அற்புதமும் இவ்விடத்தில் நிகழ்ந்தது. இந்தியாவில் இருந்த சுவாமிகள் சொற்ப நேரத்தில் வாச்சிக்குடாவில் வந்து பார்வையிட்டதுதான் அந்த அற்புதம். இரவுவேளையில் பெரிய பிரகாசமான ஒளி வடிவம் ஒன்று அங்குள்ள மருத மரத்தைச் சுற்றி வட்டமிட்டதையும், சிறிது நேரத்தில் அந்த ஒளி மறைந்ததையும் பலர் கண்டு வியப்படைந்திருக்கின்றனர். அடுத்தநாள் 2008.12.20ம் திகதி காலையில் சுவாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அந்த இடத்தை பார்வையிட்டதாகக் கூறினார். இது அதிசயம் ஆலயத்திற்கான நிலத்தை தெரிவு செய்தமையும் இதுவே.
அடிக்கல் நடுதல்.
தொடர்ந்து ராம்ஜி சுவாமிகள் அவர்கள் இந்தமாதம் முடிவடைவதற்குள் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நடப்படவேண்டும் என திகதியையும் நேரத்தையும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கிணங்க 2008.12.30ம் திகதி காலை 8.30 மணிக்கு பெருந்திரளான பக்தர்கள் முன்நிலையில் அடிக்கல் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்டுமாணப்பணிகளும் படிப்படியாக நடைபெற்று வந்நன.
Copyright (c) 2014 All rights reserved. janarthanasarma. +094755905265