Drop Down Menus in CSS by Css3Menu.co

 

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
Slideshow Images by WOWSlider.com v4.8

free web counter for craigslist 

இராமனின் சரணாகதி தத்துவம்

 

ஓரு மனிதன் எப்படி வாழ வேண்டுமென்பதை எடுத்துக் காட்டவும் மக்களை நல்வழிப்படுத்தவும் சரணாகதி தத்துவத்தை போதிப்பதற்காகவும் ஏற்பட்டது இந்த அவதாரம். தாய் தந்தையரிடம் குருவிடம் உடன் பிறந்தோரிடம் மனைவியிடம் விரோதியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் உதாரண புருஷனாக திகழ்கிறான் ஸ்ரீ ரகுராமன் ........... மேலும்

ஸ்ரீ பஞ்சமுக ராம ஆஞ்சநேயர் சுவாமியின் பெருமைகள்
ஸ்ரீஅனுமன் அஞ்சனா தேவியின் குமாரன். வீரம் பல படைத்தவன். ஜானகி பிராட்டியின் துயரத்தை போக்கடித்தவன். வானரத் தலைவன். அட்சய குமாரனை சம்ஹரித்தவன். மனம் போகும் வேகமும் வாயுவுக்குச் சமமான வேகம் உடையவன். இந்திரியங்களை ஜெயித்தவன்... மேலும்

 
 
ஸ்ரீராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எமக்கு கிடைக்கும் பலன்கள்.

புத்திபலம் புகழ் உறுதி அஞ்சாநெஞ்சம் ஆரோக்கியம் விழிப்பு வாக்குவன்மை நோயற்ற வாழ்வும் சகல........ மேலும்

ஸ்ரீ ராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானம், அக்கரைப்பற்று இலங்கை 2014

 

ஆஞ்சநேயர் ஜெயந்தி

  • slider
1 2 3
responsive slideshow by WOWSlider.com v6.4

2014.10.26 அன்று காயத்திரி சித்தர் டாக்டர் ஆர்.கே. முருகேசு மகரிஷி அவர்களின் 81ஆவது ஜெயந்திதின விழாஅன்று நடைபெற்ற குரு பூசை.

  • full screen slider
1 2 3 4 5 6 7
jquery carousel by WOWSlider.com v6.4

அதனை தொடர்ந்து சுவாமி அவர்களின் ஊர்வலமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

  • full screen slider
1 2 3 4 5 6 7 8 9 10
jquery carousel by WOWSlider.com v6.4

ஊர்வலத்தை அடுத்து யாக பூசை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

  • full screen slider
1 2 3 4 5 6 7 8
jquery carousel by WOWSlider.com v6.4

யாகத்தினை அடுத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் பூயை அடுத்த அன்னதான நிகழ்வோடு ஜெயந்தி பூயை நிகழ்வுகள் இனிதே நிறைவேறியது.

  • full screen slider
1 2 3
jquery carousel by WOWSlider.com v6.4

ஒவ்வொரு மாதமும் மிக சிறப்பான முறையில் திருவிளக்கு பூயை நடைபெறுகின்றது பலர் கலந்து நன்மை அடைந்து கொண்டு வருகின்றனர்.

  • full screen slider
1 2
jquery carousel by WOWSlider.com v6.4

 

ஆலயத்தில் நடைபெறும் தொடர்நிகழ்வுகள்

  • பிரதி வியாழக்கிழமை தோறும் குருபூசை பி.ப. 4.00மணிக்கு
  • சனிக்கிழமை, செவ்வாய்கிழமைகளில் விசேட பூசைகள் பி.ப 4.00மணிக்கு
  • அமாவாசை தினங்களில் தேங்காய் துருவல், சர்க்கரைச் சாதம் அபிஷகமும் பிதிர்க்கடன் நிறைவேற்றலும், பூசையும் யாகமும் பி.ப 3.00மணி.
  • பூரணை தினங்களில் குருபூசை, யாகபூசை, ஆஞ்சநேயர் அபிசேக பூசை அன்னதானம் .
  • விசேட ஆஞ்சநேயர் பூசை ஒவ்வொரு மாதமும் மூல நட்சத்திரம் வரும் நாளில் பி.ப 4.00மணி.
  • மகா லட்சுமி திருவிளக்குப் பூசை - ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை பி.ப 4.00மணி.
  • ஆஞ்சநேயர் ஜெயந்தி - ராம நவமி - வருடந்தோறும்.
  • குரு தேவரின் பிறந்த தினம் வருடம் தோறும் 10ம் மாதம் 26ஆந் திகதி.
  • நவராத்திரி, சிவராத்திரி விசேட பூசைகள்.
  • ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோச விரதம் சிவனுக்குரியது பி.ப 4.00மணி.

முக்கிய தகவல்

ஸ்ரீராம ஜெயம்

துதி

நவமி விஷேட பூஜை

தென்புலத்தார் வழிபாடு.

 
ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சாட்சனை விஞ்ஞாபனம்.
இவ்விழா காயத்திரி சித்தர் டாக்டர் R.K. முருகேசு சுவாமிகளின் மானசீக ஆசீர்வாதத்தோடு ராம்ஜி சுவாமிகளின் வழிகாட்டல் மூலம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று வாச்சிக்குடா
ஆரம்பம் : 13.12.2014 நிறைவு : 22.12.2014

பக்த அடியார்களே!

சிவபூமியாம் கிழக்கு மாகாணத்தில் சகல வளங்களும் பெற்ற சிறப்புற்றோங்கும் அக்கரைப்பற்று வாச்சிக்குடா என்னும் திவ்விய பகுதியில் கோவில் கொண்டு தன்னை நாடிவரும் அடியார்களின் வினைபோக்கி நல்லருள்புரியும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இலட்சாட்சனை எதிர்பரும் 22.12.2014 ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்.
ஆஞ்சநேய ஜெயந்தி தினமாகிய 22.12.2014 அன்று 108 அஸ்டோத்திர சங்காபிஷேகமும் நடைபெற்று, அன்னதானமும் நடைபெறும். சகல அடியர்களும் கலந்து இஸ்ட சித்திகளை பெறுவீர்களாக.

நிகழ்வுகள்

23.12.2013 திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு ஸ்நாபனாபிஷேகத்துடன் ஆரம்பமாகி தினமும காலை, மாலை பூசைகள் தொடர்ந்து நடைபெறும்.
இக்கிரியைகள் யாவும் குருதாசமணி சிவஸ்ரீ இரா. சண்முகசுந்தரக் குருக்கள் அவர்கள் தலைமையில் நடைபெறும். (ஸ்ரீ காயத்திரி பீடம், நுவரெலியா)
முக்கிய குறிப்பு : ஆலயத்துக்கு வரும் அடியார்கள் துளசி, பூக்கள், பூமாலைகள் கொண்டு வருமாறு வேண்டுவதோடு, இலட்சாட்சனை அர்ச்சனையில் கலந்து கொள்ளும் அடியார்கள் தங்களது பெயர் நட்சத்திரங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும்.

ஆலய பரிபாலன சபை


Copyright © 2014 All rights reserved. janarthanasarma. +094755905265

 

Free Web Hosting