முகப்பு
தேவஸ்தானம்
மூலவர் சன்னிதி
பரிபார சன்னிதி
தலவிருட்சம்
வரலாறு
அமைவிடம்
தோற்றம்
வளர்ச்சி
அற்புதம்
 
மந்திரம்
காயத்திரி
மந்திரம்
ஞானகுரு
குரு மந்திரம்
குருபீடம்
தொடர்பு
Drop Down Menus in CSS
by Css3Menu.co
ஸ்ரீ பஞ்சமுக ராம ஆஞ்சநேயர் சுவாமியின் பெருமைகள்
ஸ்ரீஅனுமன் அஞ்சனா தேவியின் குமாரன். வீரம் பல படைத்தவன். ஜானகி பிராட்டியின் துயரத்தை போக்கடித்தவன். வானரத் தலைவன். அட்சய குமாரனை சம்ஹரித்தவன். மனம் போகும் வேகமும் வாயுவுக்குச் சமமான வேகம் உடையவன். இந்திரியங்களை ஜெயித்தவன். புத்திமான்களில் சிரேஷ்டன். வாயுகுமாரன் வானர சேனைத் தலைவன். ஸ்ரீராமதூதன். சமுத்திரத்தின் ஆயிரம் யோசனை தூரத்தை விளையாட்டாக தாண்டியவர். சீதாதேவியின் துக்கம் என்ற அக்கினியை அவளிடமிருந்து விலக்கியவர். மிகச் சிறந்த முகத்தை உடையவரும்இ மேருபர்வதம் போல் மனோகரமான தேகத்தை உடையவர். பாரிஜாத மரத்தின் அடியில் வசிப்பவர். வாயுவின் புத்திரன். ஸ்ரீராமனுடைய கதையை சொல்லுமிடங்களில் கையை அஞ்சலி பந்தம் செய்து கொண்டிருப்பவர். ஆனந்த பாஷ்யத்தினால் தளும்பிய கண்களை உடையவர். ராட்சசர்களுக்குயமன் போன்றவர். ஸ்ரீ சிவ பெருமானிடம் இருந்து நெற்றிக்கண்களை பெற்றவர். ஸ்ரீமஹாவிஷ்னுவின் அவதாரமாகிய ஸ்ரீஹயக்ரீவர்இ ஸ்ரீநரஸிம்மாஇ; ஸ்ரீவராகாஇ; ஸ்ரீகருடன் அவதாரங்களை பெற்றவர். தேவாதி தேவர்களின் சகல ஆயுதங்களையும் பெற்றவர். அஹிஇ மஹிஇ மயில்வாகனன் போன்ற அசுரர்களை கொசுக்களை போன்று அழித்தவர். மும்மூர்த்திகளும் ஆஞ்சநேயரை இவ்வுலத்தில் உனக்கு நிகர் நீயே என்று போற்றி புகழ்ந்துள்ளனர். நவகிரஹங்களின் தோஷங்களை நீக்குபவர். சகல விதமான தோஷங்களையும் நீக்கி சகல சௌபாக்கியங்களையும் கொடுப்பவர். ஸ்ரீபஞ்சமுக ராம ஆஞ்சநேயர் சுவாமி நாமம் ஸ்ரீ கோதண்டராமர் சுவாமி ஸ்ரீபஞ்சமுகராம ஆஞ்சநேயர் சுவாமியை தரிசிப்போம். நலம் பல பெறுவோம்.
ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீபஜ்ரங்பலி அனுமான்
Copyright (c) 2014 All rights reserved. janarthanasarma. +094755905265